நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசிநாள்; இன்று இரவு 12 மணி வரை விண்ணப்பிக்கலாம்

சென்னை: நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு இன்று  கடைசி நாள் ஆகும். வருகிற 2019ம் ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தல் நவம்பர் 1ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், கஜா புயல் பாதிப்பால் தமிழகத்தில் சில மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை கடும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதனால் நீட் நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என பாதிக்கப்பட்டுள்ள மாணவர்கள் கோரிக்கை வைத்துனர்.

மேலும், உச்சநீதிமன்றம் இது தொடர்பான வழக்கு ஒன்றில் ஒரு வாரம் கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டது. அதன்படி, விண்ணப்பிக்க இன்று கடைசி நாள். பணம் செலுத்த 8ம் தேதி கடைசி நாளாகும். 25 வயதுக்கு மேற்பட்டவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும், வழக்கின் இறுதி தீர்ப்பை பொறுத்து உச்சபட்ச வயது வரம்பு மாறும் என்று சொல்லப்படுவதால் வயது வரம்பில் குழப்பம் தொடர்கிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED நந்தா கல்லூரியில் வளாகத் தேர்வு