5 மாநில தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள்; ம.பி.யில் இழுபறி... ராஜஸ்தானில் காங்... தெலுங்கானா சந்திரசேகர ராவ்...

புதுடெல்லி: சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், மிசோரம் மாநிலங்களில் தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இன்று ராஜஸ்தான், தெலங்கானா மாநிலங்களில் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 5 மணியுடன் இரண்டு மாநிலங்களிலும் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது. இன்றுடன் 5 மாநில தேர்தல்களும் முடிவுக்கு வந்துள்ளது. வருகிற 11ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. ராஜஸ்தானில் 20 ஆண்டு கால பாஜ ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றுமா என்பதும், தெலங்கானா மாநில பிரிப்புக்கு பின் முதன்முதலாக சட்டசபை தேர்தலை சந்திக்கும் டிஆர்எஸ் கட்சி, ஆட்சியை தக்க வைக்குமா என்ற பரபரப்பு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது.

மத்தியபிரதேசத்தில் இழுபறி

மத்தியபிரதேசத்தில் இழுபறி நிலை ஏற்படலாம் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன. 230 தொகுதிகளை கொண்ட மத்திய பிரதேசத்தில் பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை. இந்நிலையில் ஆஜ்தக் கருத்துக்கணிப்பில் பாஜகவுக்கு 102-ல் இருந்து 120 இடம் கிடைக்கலாம் என்றும், காங்கிரஸ் கட்சிக்கு 104-ல் இருந்து 122 வரை கிடைக்க்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா டுடே கருத்துக்கணிப்பிலும் காங்கிரஸ் கட்சிக்கு 104 முதல் 122 இடம் கிடைக்கும் என்றும், பாஜகவுக்கு 102 முதல் 120 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானா

தெலுங்கானாவில் டி.ஆர்.எஸ். கட்சிக்கு 66 இடங்களும், காங்கிரஸ் கட்சிக்கு 37 இடங்களும், பாஜகவுக்கு 7 இடங்களும், மற்றவர்கள் 9 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக டைம்ஸ் நவ் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தான் - காங்கிரஸ் கட்சி்க்கு 105

ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என்று கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. ராஜஸ்தானில் காங்கிரஸ் கட்சிக்கு 105 இடங்கள் கிடைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் டைம்ஸ் நவ்  தெரிவித்துள்ளது. பாஜகவுக்கு 85 இடங்களுமி், பிஎஸ்பி 2, சுயேட்சைகள் 7 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில் 199 சட்டப்பேரவை தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றுள்ளது. ந

சத்தீஸ்கர்

91 தொகுதி கொண்ட சத்தீஸ்கரில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் பெரும்பானமை பலம் பெற 47 இடங்கள் வேண்டும். சத்தீஸ்கர் மாநிலத்தில் பாஜகவுக்கு 46 இடங்கள் கிடைக்கும் என்றும், காங்கிரஸ் கட்சி 35 இடங்களில் வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் டைம்ஸ் நவ் தெரிவித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர...