வேதாரண்யம் அருகே குடிநீர், மின்சாரம் கேட்டு மக்கள் சாலை மாறியலால் போக்குவரத்து பாதிப்பு

நாகை: நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் குடிநீர் மின்சாரம் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் கஜா புயலின் தாக்கத்தால் வேதாரண்யம் அருகே உள்ள மருதூரில் பொதுமக்கள் வீடுகளை இழந்தும், வாழ்வதாரத்தை பறிகொடுத்தும் தவித்து வருகின்றனர். புயல் தாக்கி 22 நாட்கள் ஆகியும் மின்சாரம், குடிநீர் கிடைக்காததால், பாதிக்கப்பட்ட மக்கள் மருதூர் தெற்கில் இரட்டை கடை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுவரை அதிகாரிகள் தங்கள் பகுதிகளை பார்வையிட வரவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளனர். சேதங்கள் குறித்து விவரங்கள் எடுக்கவும், நிவாரணங்கள் ஏதும் சரிவர வழங்கப்படவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

மின்னிணைப்பு இன்னும் கிடைக்காததால் மக்கள் அவதியுற்று வருவதாக வேதனை தெரிவித்தனர். மேலும் இவர்களின் சாலை மறியல் போராட்டத்தால் 1 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து அவர்களை களைந்து சென்றனர். இதையடுத்து மின்சாரம், குடிநீர் கிடைக்காவிட்டால் போராட்டம் மீண்டும் தொடரும் என்றும் மக்கள் எச்சரித்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED வேதாரண்யத்தில் வெயிலுக்கு சுருண்டு விழுந்து முதியவர் சாவு