கடலூர் அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்புத் துறையினர்

கடலூர்: கடலூர் மாவட்ட அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களிடம் இருந்து கட்டு கட்டாக பணத்தை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். கடலூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளிடம் இருந்து மருத்துவமனை பணியாளர்கள் பல வேலைகளுக்கு லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தால் ரூ.500 மற்றும் ஆண் குழந்தை பிறந்தால் ரூ.1000, நோயாளிகள் தங்கியுள்ள அறைகளை சுத்தம் செய்ய ரூ.200 என மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மாவட்ட துணை ஆட்சியர் பானுகோபால், மாவட்ட லஞ்ச துணை கண்காணிப்பாளர் என மொத்தம் 20 பேர் மருத்துவமனையில் சோதனை மேற்கொண்டனர். மகப்பேறு மையம், சி.டி ஸ்கேன் மையம் உள்ளிட்ட இடங்களில் அவர்கள் சோதனை நடத்தினர். அப்போது மகப்பேறு மையத்தின் பாதுகாவலர், பெண் ஊழியர் ஆகியோரிடம் இருந்து அவர்கள் பணம் பறிமுதல் செய்துள்ளனர். சி.டி ஸ்கேன் மையத்தில் வரிகை பதிவேடு உள்ளிட்ட 10கும் மேற்பட்ட ஏடுகளில் 500 ரூபாய், 1000 ரூபாய், 2000 ரூபாய் என கட்டுக்கட்டாக போலீசார் பணம் பறிமுதல் செய்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ராமநாதபுரத்தில் பரபரப்பு அம்மா...