கரூரில் ரூ.490 கோடி செலவில் கதவணை கட்ட பணிகள் துவக்கப்படும்: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர்: கரூர் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த புகழூரில் 490 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு விரைவில் பணிகள் துவக்கப்படும் என போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புகழூர் பகுதியில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும் என நாமக்கல் மற்றும் கரூர் மாவட்ட மக்கள் கடந்த 50 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தது வருகின்றனர். இதனை அடுத்து முதலமைச்சரின் உத்தரவின் பேரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், காவிரியின் குறுக்கே 1,140 மீட்டர் நீளத்திற்கு கட்டப்படும் இந்த கதவணை மூலம் ஒரு டி.எம்.சி தண்ணீரை சேமித்து வைக்க முடியும் என்று கூறினார்.

இதனால் இப்பகுதி மக்களின் குடிநீர் பிரச்சனை தீரும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் விவசாயிகளின் நீர் பாசன வசதிக்காக இந்த திட்டம் உபயோகமானதாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். இதனை தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசு சார்பில் படித்த மாணவ, மாணவிகளுக்கு திருமண உதவித்தொகை மற்றும் தங்க நாணயம் வழங்கப்பட்டு வருவதாகவும், அதேபோல் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது என்றும் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED காவிரி கரையில் தரமற்ற கட்டுமான பணி