ஒரு ரூபாய் நாணயத்தை உருவாக்க நாணயம் ஒன்றிற்கு தலா ரூ.1.11 காசுகள் செலவு

மும்பை : ஒரு ரூபாய் நாணயத்தின் மதிப்பை விட அதனை தயாரிப்பதற்கான செலவு சற்று அதிகம் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.  நாடு முழுவதும் புழக்கத்தில் உள்ள 1,2,5,10 ரூபாய் நாணயங்களை மும்பையில் உள்ள நாணய தொழிற்சாலை தயாரித்து வருகிறது. இந்த நிலையில் நாணயங்களின் தயாரிப்பு செலவு, தயாரிக்கப்படும் எண்ணிக்கை தொடர்பாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு ஆர்பிஐ பதில் அளித்துள்ளது.

அதில் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயங்களை உருவாக்குவதற்கான செலவுகள் குறித்து ரிசர்வ் வங்கி தகவல் தெரிவித்துள்ளது.ஒரு ரூபாய் நாணயங்களை உருவாக்க ஒரு நாணயம் ஒன்றிற்கு தலா ரூ.1.11 காசுகள் செலவாகிறதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களை விட தற்போது நாணயங்கள் உருவாக்குவது குறைந்துள்ளது.

நாணயங்கள் தயாரிப்பதற்கான செலவு

நாணயம்    தயாரிப்பு செலவு
   ரூ.1                         ரூ.1.11
   ரூ.2                         ரூ.1.28
   ரூ.5                         ரூ.3.69
   ரூ.10                       ரூ. 5.54

நாணயங்கள் உற்பத்தி விவரங்கள்

நிதியாண்டு     நாணயங்கள் உற்பத்தி
 2016 – 17               220 கோடி
 2015 – 16               215 கோடி
 2017 – 18               163 கோடி

1 ரூபாய் நாணயத்தைப் பொருத்தவரை 2016 – 17 நிதியாண்டில் 90 கோடி நாணயங்கள் தயாரிக்கப்பட்டன. எனினும், இந்த எண்ணிக்கை 2017 – 18 நிதியாண்டில் 63 கோடியாக குறைந்தது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தேங்காய் விலை வீழ்ச்சியால் தென்னை...