சென்னையில் போலி மருத்துவர்கள் மாநாடு நடத்துவதாக புகார்: சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை

சென்னை: சென்னையில் பரம்பரை வைத்தியர்கள் என்று கூறி போலி மருத்துவர்களை மாநாடு நடத்துவதாக புகார் எழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை தியாகராய நகர் அலமேலு மங்கா திருமண மண்டபத்தில் பரம்பரை மருத்துவர்கள் மாநாடு என்ற பெயரில் முறைப்படி மருத்துவ சான்று பெறாத போலி டாக்டர்கள் ஒன்று கூடி தங்களை மருத்துவராக அங்கீகரிக்க கோரி மாநாடு நடத்துவதாகவும் அதில் அமைச்சர்கள் பங்கேற்க இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மாநாட்டை ஒருங்கிணைத்து நடத்தும் சுப்பையா, தமிழரசி தம்பதி ஏராளமானவர்களிடம் பணம் வசூலித்துக் கொண்டு போலி மருத்துவ சான்று தயாரித்து வழங்கி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஏற்கனவே போலி மருத்துவர்களால் தமிழகத்தில் பல உயிரிழப்புகள் நிகழும் சூழ்நிலையில், இவர்களை போன்றவர்களின் சிகிச்சை முறைகளை கண்காணித்து அதற்கான நடவடிக்கைகளை சுகாதாரத்துறை மேற்கொள்ள வேண்டும் என ஆயுர்வேத மருத்துவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

அதே சமயத்தில் அவர்களிடம் விசாரணை நடத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளிடம், இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்துள்ள சுப்பையா தம்பதி, பரம்பரை வைத்தியர்கள் போலி டாக்டர்கள் அல்ல என்றும் 1993 க்கு முன்பு அரசாங்கமே தங்களை அங்கீகரித்து ரெஜிஸ்ட்ரேஷன் இண்டியன் மெடிக்கல் பிரேக்டிஷனர் என்ற பதிவுச்சான்றிதழை வழங்கியதாகவும் தற்போது தான் சான்றிதழ் வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். போலி மருத்துவர்களை அடையாளப்படுத்தவும், போலி மருத்துவர்களை தெளிவுபடுத்தவும், அரசின் பொது சுகாதாரதுறை தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED புகாரை வாபஸ் பெறக்கோரி அறம் மக்கள்...