மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை : கர்நாடக அமைச்சர் சிவக்குமார்

பெங்களூரு : மேகதாதுவில் அணை கட்டுவதால் தமிழகத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை என கர்நாடக அமைச்சர் சிவக்குமார் கூறியுள்ளார். மேகதாதுவில் அணை கட்ட உள்ள இடத்தில் ஆய்வு செய்து பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், கடலில் வீணாக கலக்கக் கூடிய தண்ணீரை சேமிக்கவே மேகதாதுவில் அணை கட்டப்படுகிறது என்றும், தமிழகத்துக்கு தர வேண்டிய 177 டிஎம்சி காவிரி நீர் நிச்சயம் கிடைக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED தமிழகத்தில் வரும் நாட்களில்...