அரசு மருத்துவமனைகளில் நடத்திய சோதனையில் பணம் பறிமுதல் : லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள்

சென்னை : அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்நிலையில் சோதனையில் ஊழியர்களிடம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடலூர் அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் ரூ.4 ஆயிரமும், மதுரை அரசு மருத்துவமனையில் பணியாளர் ஒருவரிடம் ரூ.10 ஆயிரமும் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இரிடியம் உள்ள கோபுரக் கலசங்களை...