பணமதிப்பிழப்புக்கு பின்பும் கறுப்புப்பண விவரங்கள் சேகரிக்கப்படவில்லை: வருமான வரித்துறை திணறல்

மும்பை : பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகும் கறுப்புப்பணம் வைத்திருப்பவர்கள் தொடர்பான துல்லியமான தகவல்களை சேகரிக்க முடியாமல் வருமான வரித்துறை திணறி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகள் மூலமாக இந்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

கறுப்புப்பணத்தை ஒழிப்பதற்காக வருமான பிரகடன திட்டம், பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டாலும் கூட அதன் மூலமாக எத்தனை பேரிடம் கறுப்புப்பணம் தேங்கியிருக்கிறது என்ற தகவல்கள் இதுவரை சேகரிக்கப்படவில்லை என்று வருமான வரித்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

அதே போல மற்றொரு கேள்விக்கு பதில் கொடுத்த வருமான வரித்துறை இயக்குனரகம், கறுப்புப்பணம் தொடர்பான விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளிப்படுத்த முடியாது என்றும் கூறி இருக்கிறது. அதே சமயம் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மூலமாக வருமான வரி தாக்கல் செய்யாத சுமார் 3 லட்சம் பான் கார்டுகள் அடையாளம் காணப்பட்டு இருப்பதாகவும் அனைவருக்கும் வரி கணக்கு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சீட்டு பணத்தை தராமல் மோசடி பெண் கைது