வேளாண் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

டெல்லி: வேளாண் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. செங்கோட்டையில் சுதந்திர தின விழாவில் ஏற்கனவே பிரதமர் மோடி, விரைவில் புதிய வேளாண் கொள்கை உருவாக்கப்படும் என்று அறிவித்திருந்தார். இந்நிலையில் டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த வேளாண் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தேயிலை தூள், காபி பவுடர், அரிசி போன்றவற்றின் மீதான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுகின்றன. உள்நாட்டு வேளாண் பொருட்களுக்கு சர்வதேச சந்தையில் நல்ல விலை கிடைக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தரமான வேளாண் பொருட்களை உறுதி செய்வதற்கான திட்ட வரைவு, வேளாண்மை ஆய்வு, வேளாண் பொருட்கள் உற்பத்தியில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இக்கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதன் மூலம் வரும் 2022ம் ஆண்டிற்குள் வேளாண் உற்பத்தி பொருட்களுக்கு இரு மடங்கு வரை வருமானம் கிடைக்க இந்த கொள்கை வழிவகை செய்துள்ளது.இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு, 2022ம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவது என்ற மத்திய அரசின் திட்டத்தின்படி,2022ம் ஆண்டிற்குள் வேளாண் பொருட்களின் ஏற்றுமதியை 4 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மாலை கூடுகிறது