ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணியில் தீவிரவாத அமைப்புகள்: தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வாதம்

டெல்லி: ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணியில் தீவிரவாத அமைப்புகள் உள்ளன என்று தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் வாதிட்டுள்ளது. தூத்துக்குடி மக்களின் குடிநீர், சுகாதார வசதி, பள்ளிகள் அமைக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்ததாகவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஆலையை மூட மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கே அதிகாரம் உள்ளது என்று தெரிவித்துள்ளது. தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவை எதிர்த்து நாங்கள் முறையிட்டது சரியே என்று ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் ஸ்டெர்லைட் போராட்டத்தின் பின்னணியில் மாவோயிஸ்ட்கள் இல்லை என்று தமிழக அரசு வாதிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் அரசாணையை நீதிமன்றத்தில் மட்டுமே எதிர்கொள்ள முடியும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசின் அரசாணையை எதிர்க்க முடியாது என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் வழக்கின் விசாரணையை வரும் திங்கட்கிழமைக்கு ஒத்திவைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் வழக்கில் வைகோ வாதாட பசுமை தீர்ப்பாயம் அனுமதி மறுத்துள்ளது. ஸ்டெர்லைட் வழக்கில் தாமும் ஒரு மனுதாரராக இருப்பதால் வாதாட வைகோ அனுமதி கேட்டிருந்தார். இந்நிலையில் பசுமை தீர்ப்பாய நீதிபதி ஏ.கே. கோயல், வைகோ வாதாட அனுமதி மறுத்துள்ளார்.

ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரிக்க தடை விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சிபிஐ விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஸ்டெர்லைட் போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு மலரஞ்சலி