அரசு புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பான அரசாணை வெளியீடு

சென்னை: புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவது தொடர்பான தமிழக அரசின் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 2018-2019ம் ஆண்டில் நிதி நிலை அறிக்கையில் ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் ஏழை மக்களுக்கு நிரந்தரமாக வீடு வழங்க வேண்டும் என்பதற்காகவும், அரசு நிலங்களை ஆக்கிரமிப்புகளில் இருந்து மீட்டெடுத்து உரிய செயல்பாட்டிற்கு உட்படுத்தும் வகையிலும், சம்மந்தப்பட்ட கிராமங்களில் வருவாய்த்துறையின் மூலம் தனியார் நிலங்களை கையகப்படுத்தி ஏழை குடும்பங்களுக்கு வீட்டு மனை பட்டா இலவலசமாக வழங்கக்கூடிய புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும் சென்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை செயல்படுத்துவதற்காக கடந்த ஜூலை மாதம் முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு வரைமுறை திட்டத்தை நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதனடிப்படையில் அதற்கான தமிழக அரசின் ஆணை இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அந்த ஆணையில், நீர்நிலை, மேய்க்கால் மற்றும் சாலைகள் போன்ற ஆட்சேபகரமான புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலம் ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்களை அப்புறப்படுத்தி, அதன் தன்மை மாறாமல் பாதுகாக்கும் பொருட்டு மாற்று இடம் தேர்வு செய்து பயணாளிகளுக்கு தகுதியின் அடிப்படையில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 5 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருக்கும் தகுதியுள்ள நபர்களை வெளியேற்றவும், அவர்களுக்கு மறுகுடியமைப்பு தொடர்பாக மாற்று இடத்தில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்ட இருப்பதாகவும், அதன்படி தனியார் பட்டா நிலங்களை வருவாய்த்துறை மூலம் கையகப்படுத்தி ஏழை மக்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தகுதியின் அடிப்படையில் 6 மாதங்களில் 3 சென்ட் அளவிற்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரை ஆண்டு வருமானம் உடைய குடும்பத்திற்கு இலவச வீட்டு மனை பட்டா பெற தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஓபிஸ், ஈபிஸ் அறிக்கை வெளியீடு