மொடக்குறிச்சி அருகே 2 ஆயிரம் கிலோ கலப்பட வெல்லம் பறிமுதல்

மொடக்குறிச்சி: ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு மாவட்ட அலுவலர் கலைவாணி தலைமையிலான அலுவலர்கள் நேற்று முள்ளாம்பரப்பு, வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் 10 கரும்பு ஆலைகளில் உருண்டை வெல்லம் தயாரிக்கும் இடத்தை திடீர் ஆய்வு செய்தனர்.  அப்போது ஐந்து ஆலைகளில் சூப்பர் பாஸ்பேட், அஸ்கா சர்க்கரை (ஜீனி) கலந்து உருண்டை வெல்லம் தயாரிப்பது தெரியவந்தது.
இதனையடுத்து கலப்படம் செய்த 2 ஆயிரம் கிலோ உருண்டை வெல்லத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 5 ஆலைகளில் இருந்து மாதிரிகளை எடுத்துச் சென்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், பரிசோதனை முடிவுகள் ஆவணப்பூர்வமாக கிடைத்தவுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED மொடக்குறிச்சியில் தாலுகா மருத்துவமனை