லூகா மோர்டிச்சுக்கு சிறந்த வீரர் விருது: 2018 கால்பந்து சீசன்

பாரிஸ்: ஆண்டின் தலைசிறந்த கால்பந்து வீரருக்கான பலோன் டி’ஆர் விருதை குரோஷியாவின் லூகா மோர்டிச் தட்டிச் சென்றார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நேற்று முன்தினம் இரவு நடந்த வண்ணமயமான விழாவில், அதிக வாக்குகளுடன் முதலிடம் பிடித்த லூகா மோர்டிச்சுக்கு (33 வயது) பெருமைமிகு பலோன் டி‘ஆர் விருது வழங்கப்பட்டது. குரோஷியா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்காக 2018 சீசனில் மிகச்சிறப்பாக செயல்பட்ட அவர், நட்சத்திர வீரர்கள் கிறிஸ்டியானோ ரொனால்டோ (போர்ச்சுகல்), லியோனல் மெஸ்ஸி (அர்ஜென்டினா) ஆகியோரின் ஆதிகத்தை முறியடித்து முதல் முறையாக இந்த விருதை பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளாக ரொனால்டோ அல்லது மெஸ்ஸி மட்டுமே இந்த விருதை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

உலக கோப்பை பைனலில் குரோஷிய அணி 2-4 என்ற கோல் கணக்கில் பிரான்சிடம் தோற்றாலும், சிறந்த வீரருக்கான தங்க கால்பந்து விருது மோர்டிச்சுக்கே கிடைத்தது. மேலும், ஐரோப்பிய கால்பந்து சீசனின் சிறந்த வீரர், பிபா சிறந்த வீரர் விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். பலோன் டி’ஆர் விருதுக்கான போட்டியில் ரொனால்டோ 2வது இடமும், பிரான்ஸ் வீரர் அந்தோனி கிரீஸ்மேன் 3வது இடமும் பிடித்தனர். பிஎஸ்ஜி அணியின் இளம் வீரர் கைலியன் பாப்பே 4வது இடத்தை பெற்ற நிலையில், அர்ஜென்டினா/ பார்சிலோனா நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸிக்கு இம்முறை 5வது இடமே கிடைத்தது. சிறந்த வீராங்கனைக்கான பலோன் டி’ஆர் விருதை நார்வே வீராங்கனை அடா ஹெகர்பர்க் தட்டிச் சென்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ட்வீட் கார்னர்... சச்சினுக்கு ஐசிசி வாழ்த்து!