சில்லி பாயின்ட்...

* ஐபிஎல் டி20 தொடரில் விளையாடும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் பெயர் ‘டெல்லி கேப்பிடல்ஸ்’ என மாற்றப்பட்டுள்ளதாக அந்த அணி நிர்வாகம் நேற்று அறிவித்துள்ளது.
* இந்திய அணி வீரர்களைக் கிண்டல் செய்யும் வகையில் செய்தி வெளியிட்ட ஆஸ்திரேலிய மீடியாவை அந்நாட்டு ரசிகர்களே கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
* பாட்னா பைரேட்ஸ் அணியுடன் நேற்று நடந்த புரோ கபடி லீக் ஆட்டத்தில், குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 45-27 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக வென்றது.
* உலக கோப்பை ஹாக்கி போட்டித் தொடரில் நேற்று நடந்த பி பிரிவு லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. அயர்லாந்து - சீனா அணிகளிடையே நடந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இந்த பிரிவில் ஆஸ்திரேலியா (6), சீனா (2) முதல் இரண்டு இடங்களில் உள்ளன. அயர்லாந்து, இங்கிலாந்து தலா 1 புள்ளி மட்டுமே பெற்று பின்தங்கியுள்ளன.
* மும்பை கிரிக்கெட் வீரர்களை வேண்டுமென்றே புறக்கணிப்பதாக தேர்வுக் குழுவினர் மீது முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் குற்றம்சாட்டி உள்ளார்.
* இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ரமேஷ் பவார் மீண்டும் நியமிக்கப்பட வேண்டும் என்று ஹர்மான்பிரீத் கவுர், ஸ்மிரிதி மந்தனா ஆதரவு தெரிவித்து பிசிசிஐ-க்குகடிதம் அனுப்பி உள்ளனர். இந்நிலையில், புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வதற்கான குழுவில் கபில் தேவ், கெயிக்வாட் இடம் பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
* ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கியதால் ரஷ்ய அணிக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் என்று சர்வதேச தடகள கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
* பிரான்ஸ் நாட்டில் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், பிஎஸ்ஜி - மான்ட்பெல்லியர் கால்பந்து அணிகளிடையே சனிக்கிழமை நடைபெற இருந்த லீக் ஆட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சில்லி பாயின்ட்...