ஆஸி., தொடருக்கு பின் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்தியா முதலிடத்தில் தொடருமா..?

அடிலெய்டு: ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய டெஸ்ட் அணி 116 புள்ளிகளுடன் முதல் இடம் வகிக்கிறது. டெஸ்ட் போட்டிகளில் நம்பர் 1 அணியாக திகழும் இந்தியாவிற்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றால் ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் அந்த அணி முதலிடம் பிடிக்கும் வாய்ப்புள்ளது. அவ்வாறு தொடரை இழக்கும் பட்சத்தில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு தள்ளப்படும். இங்கிலாந்து 108 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடிக்கும்.

தற்போது ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் 102 புள்ளிகளுடன் 4-வது இடத்தில் உள்ளன. 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறது. ஐசிசி தரவரிசையில் இந்தியா முதல் இடத்தில் நீடிப்பது இதுவே அதிகமாகும். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரில் இந்தியா குறைந்த பட்சம் ஒரு டெஸ்டில் ‘டிரா’ செய்தால் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கும்.

4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றால் 120 புள்ளிகளுடன் அசைக்க முடியாத நம்பர் 1 அணியாக இந்தியா விளங்கும். 4-0 என்று தொடரை இழந்தால் ஆஸ்திரேலியா 6-வது இடத்திற்கு தள்ளப்படும். இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டில் வரும் 6-ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED இந்தியா மீண்டும் வெற்றி பெற்றுள்ளது:...