இந்தியா ஏ நியூசிலாந்து ஏ டெஸ்ட் தொடர் சமன்

வாங்கரெய்: இந்தியா ஏ - நியூசிலாந்து ஏ அணிகள் மோதிய 3வது டெஸ்டின் கடைசி நாள் ஆட்டம் கனமழை காரணமாக ரத்தானதை அடுத்து, 3 போட்டிகள் கொண்ட தொடர் 0-0 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. கோபாம் ஓவல் மைதானத்தில் நடந்த இப்போட்டியில், இந்தியா ஏ அணி முதல் இன்னிங்சில் 323 ரன் குவித்து ஆல் அவுட்டானது. அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து ஏ அணி, 398 ரன் குவித்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்தியா ஏ பந்துவீச்சில் கிருஷ்ணப்பா கவுதம் 6 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

இதைத் தொடர்ந்து, 75 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இந்தியா ஏ அணி 3ம் நாள் ஆட்ட முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 38 ரன் எடுத்திருந்தது. இந்த நிலையில், நேற்று நடைபெறுவதாக இருந்த 4வது மற்றும் கடைசி நாள் ஆட்டம், கனமழை காரணமாக ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. மூன்றாவது போட்டியும் டிராவில் முடிந்ததால், மொத்தம் 3 போட்டிகள் கொண்ட தொடர் 0-0 என சமனில் முடிந்தது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் (அங்கீகாரமற்றது) மோதுகின்றன. முதல் போட்டி மவுன்ட் மவுங்கானுயி மைதானத்தில் டிச. 7ம் தேதி நடைபெறுகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED போல்ட் வேகத்தில் சரிந்தது இந்தியா...