ஷார்ஜாவில் டி10 லீக் தொடர் நார்தர்ன் வாரியர்ஸ் சாம்பியன்

ஷார்ஜா: டி10 லீக் தொடரின் பைனலில் பாக்டூன்ஸ் அணியை 22 ரன் வித்தியாசத்தில் வென்ற நார்தர்ன் வாரியர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் ஷாகித் அப்ரிடி தலைமையிலான பாக்டூன்ஸ் அணியுடன் டேரன் சம்மி தலைமையிலான நார்தர்ன் வாரியர்ஸ் அணி மோதியது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பாக்டூன்ஸ் அணி முதலில் பந்துவீசியது.

நார்தர்ன் வாரியர்ஸ் அணி 10 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன் குவித்தது. சிம்மன்ஸ் 5, பூரன் 18, ரஸ்ஸல் 38 ரன் (12 பந்து, 3 பவுண்டரி, 4 சுக்சர்) எடுத்து ஆட்டமிழந்தனர். ரோவ்மன் பாவெல் 61 ரன் (25 பந்து, 8 பவுண்டரி, 4 சிக்சர்), டேரன் சம்மி 14 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். அடுத்து களமிறங்கிய பாக்டூன்ஸ் அணி 10 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 118 ரன் எடுத்து 22 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. பிளெட்சர் 37 ரன் (18 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்), ஷபிகுல்லா 26 ரன் (16 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ஷாகித் அப்ரிடி 17 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். வாரியர்ஸ் பந்துவீச்சில் கிரீன், வில்ஜோயன் தலா 2, ரஸ்ஸல், போபாரா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். வாரியர்ஸ் வீரர்கள் ரோவ்மன் பாவெல் ஆட்ட நாயகன் விருதும், வில்ஜோயன் தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED கூடைப்பந்து போட்டி ேகரளா, அரியானா அணிகள் சாம்பியன்