சில்லி பாயின்ட்...

* 2032ம் ஆண்டு இந்தியாவில் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கு விருப்பம் தெரிவித்து இந்திய ஒலிம்பிக் சங்கம் முதல் முறையாக ஒப்பந்தப் புள்ளியை சமர்ப்பித்துள்ளது. ஒலிம்பிக் போட்டியை நடத்தும் நாட்டை தேர்வு செய்வதற்கான பரிசீலனை 2022ம் ஆண்டில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்ட நாடு எது என்பது 2025ம் ஆண்டு அறிவிக்கப்படும். இந்தியா தேர்வு செய்யப்பட்டால் டெல்லி அல்லது மும்பையில் போட்டி நடத்தப்பட வாய்ப்பு உள்ளதாக ஐஓசி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தோனேசியா, சீனா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளும் போட்டியில் இறங்க திட்டமிட்டுள்ள நிலையில், வட கொரியா, தென் கொரியா இணைந்து நடத்த விருப்பம் கொண்டுள்ளதாக தெரிகிறது.
* புரோ கபடி லீக் தொடரின் ஏ பிரிவில் யு மும்பா (72), குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் (63), புனேரி பல்தான் (47) அணிகள் முதல் 3 இடங்களில் உள்ளன. பி பிரிவில் பெங்களூரு புல்ஸ் (58), பாட்னா பைரேட்ஸ் (46), பெங்கால் வாரியர்ஸ் (42) அணிகள் முன்னிலை வகிக்கின்றன. தமிழ் தலைவாஸ் அணி 33 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளது.
* 2019ம் ஆண்டு ஐபிஎல் டி20 சீசனுக்கான வீரர்கள் ஏலம் ஜெய்பூரில் வரும் 18ம் தேதி நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. 50 இந்திய வீரர்கள் மற்றும் 20 வெளிநாட்டு வீரர்கள் ஏலப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED சில்லி பாயின்ட்...