தேசிய ஜூனியர் தடகளம் 4 தங்க பதக்கத்துடன் மத்திய பிரதேசம் முன்னிலை : தமிழகம் 4வது இடம்

திருப்பதி: தேசிய ஜூனியர் தடகள போட்டியில், 4 தங்கப் பதக்கங்களுடன் மத்தியப்பிரதேச அணி முன்னிலை வகிக்கிறது. திருப்பதி, வெங்கடேஸ்வரா பல்கலை. தாரகராமா மைதானத்தில் தேசிய ஜூனியர் தடகள போட்டி கடந்த 1ம் தேதி  தொடங்கியது. போட்டிகளை மாநில  தொழில்துறை  அமைச்சர்  அமர்நாத்  ரெட்டி தொடங்கி வைத்தார்.
இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர். இதுவரை நடைபெற்ற போட்டிகளில் மத்திய பிரதேச அணி 4 தங்க பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. உத்தர பிரதேசம், அரியானா, தமிழகம் அடுத்த இடங்களில் உள்ளன. ஆந்திரப்பிரதேசம் 6வது இடத்திலும், தெலங்கானா 13வது இடத்திலும் பின்தங்கி உள்ளன. நேற்று நடந்த போட்டிகளை காண்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் விளையாட்டு மைதானத்திற்கு குவிந்தனர். தொடர்ந்து அவர்கள் வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்தி போட்டிகளை கண்டு ரசித்தனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆசியன் கராத்தே போட்டியில் தமிழக...