நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை: விராட் கோஹ்லி

அடிலெய்டு: ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 6-ம் தேதி தொடங்குகிறது. கடந்த முறை இந்தியா ஆஸ்திரேலியா சென்றிருந்தபோத விராட் கோஹ்லி நான்கு சதங்களுடன் 692 ரன்கள் குவித்திருந்தார். இந்த தொடரிலும் அதிக ரன்கள் குவிப்பார் என்று எதிர்பார்க்கப்டுகிறது. இந்நிலையில் நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய தேவையில்லை என்று கோஹ்லி கூறியுள்ளார்.

இதுகுறித்து விராட் கோஹ்லி கூறுகையில் ‘‘நீங்கள் விளையாடும்போது ஒவ்வொரு தொடரில் இருந்தும், ஒவ்வொரு போட்டியில் இருந்தும், ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும்போது கற்றுக் கொள்கிறீர்கள். நான் கடந்த முறை இங்கு வந்த போது இருந்ததைவிட, தற்போது அதிகப்படியான நம்பிக்கையில் உள்ளேன். நான் யாருக்காகவும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இருப்பதா உண்மையிலேயே நினைத்தது இல்லை.

அணி என்னிடம் என்ன எதிர்பார்க்கிறது என்பதை செய்வதுதான் முக்கியமானது. என்னால் முடிந்த அளவிற்கு 100 சதவீதம் பங்களிப்பை அணிக்காக அளிப்பேன். நான் கிரிக்கெட் ஆட தொடங்கியபோது முக்கியமான மைல்கல்லை எட்ட வேண்டும் என்ற நினைப்புகள் இருந்தன. ஆனால் தற்போது முழுக்கவனமும்  அணியை எப்படியாவது வெற்றி பெற வைக்க வேண்டும் என்பதுதான்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED ஆஸி., கிரிக்கெட் வீரர்களுடன் இணைந்து...