×

ஆணவக் கொலை வழக்கில் ஒசூரில் கைதான 3 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல்: மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவு

ஒசூர்: ஒசூர் அருகே சூடுக்கொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த சுவாதி மற்றும் நந்தீஸ் காதல் தம்பதி ஆணவக் கொலை தொடர்பாக 3 பேர் கைதான நிலையில் மேலும் 3 பேரை கர்நாடகா மாநில காவல் துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது தொடர்பாக பேசிய கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்ட காவல் துறை காவல் கண்காணிப்பாளர் சிவபிரகாஷ், கடந்த 12 மற்றும் 15-ம் தேதிகளில் காதல் தம்பதியரின் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டதாக தெரிவித்திருக்கிறார். அதில் இருவரும் ஓசூர் அருகே  சூடுக்கொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்ததாக கூறியிருக்கிறார். ஓசூரில் கொலை செய்தால் தெரிந்துவிடும் என்று நினைத்து சுவாதியின் தந்தை மற்றும் உறவினர்கள் மாண்டியாவில் உள்ள சின்னம்மன் கோவிலுக்கு சென்று வரலாம் என கூறி காதல் தம்பதியை 8-ம் தேதி அழைத்து வந்து கை, கால்களை கட்டி கர்நாடக காவிரி ஆற்றில் வீசி கொலை செய்திருப்பது தெரியவந்திருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.

இது தொடர்பாக ஏற்கனவே சுவாதியின் தந்தை உள்ளிட்ட 3 பேர்  கைது செய்யப்பட்ட நிலையில் கொலையில் தொடர்புடைய அஷ்வத்தப்பா, வெட்மணன், வெங்கட்ராஜ் ஆகியோரை கைது செய்திருப்பதாக எஸ்.பி. சிவபிரகாஷ் தெரிவித்துள்ளார். மேலும் ஓசூர் அருகே காதல் தம்பதியை ஆணவக்கொலை செய்த வழக்கில் கைதான 3 பேருக்கு 7 நாள் போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் 7 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Osman ,District Court of Criminal Procedure , 7 days,police,3 arrested,Osman,murder case
× RELATED தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் 28.5...