×

குளிர்காலம் தொடங்குவதால் கம்பளி விற்பனை ஜோர்

போச்சம்பள்ளி: குளிர்காலம் நெருங்குவதால் போச்சம்பள்ளியில் கம்பளி விற்பனை ஜோராக நடக்கிறது. கார்த்திகை முதல் தை மாதம் வரையில் அதிகப்படியான குளிர் நிலவும். அதிலும், தேவர்களின் ஆண்டாக கருதப்படும் மார்கழி மாதத்தில் தூய்மையான குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவும். அதையொட்டி கம்பளி, போர்வை, ஸ்வர்ட்டர், குல்லா போன்றவற்றின் விற்பனை நாடு முழுவதும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் தமிழகத்தை நோக்கி வந்துள்ளனர். அவர்கள் தலைச்சுமையாகவும், சைக்கிளிலும், டூவீலரிலும் கம்பளி, போர்வைகளை வைத்துக்கொண்டு வீதி, வீதியாக சென்று விற்பனை செய்கின்றனர்.

போச்சம்பள்ளி பகுதியில் அதிகளவு கம்பளி விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. தற்போது மழைகாலமாக இருப்பதால் இரவு நேரத்தில் குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல்வேறு வகையான கம்பளிகளை போச்சம்பள்ளி பேருந்து நிலையம் மற்றும் மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. ஹரியானா மாநிலத்தில் இருந்து வாங்கி வரப்பட்ட கம்பளிகளை, மத்திய பிரதேசத்தை சேர்ந்த வியாபாரிகள் விற்பனை செய்து வருவதை காணமுடிகிறது.

கண்களை கவரும் பல வகை ரகங்களில் கம்பளிகளை விற்பனைக்கு வாங்கி வந்து விற்பனை செய்து வருகின்றனர். வியாபாரிகள் கூறியதாவது; மார்கழியில் குளிர் அதிகரிக்கும் என்பதால் பல்வேறு விதமான கம்பளிகளை வாங்கி விற்பனைக்கு வைத்துள்ளோம். ஒருவர் பயன்படுத்தும் வகை கம்பளிகள் 150 ரூபாய்க்கும், இருவர் பயன்படுத்தும் கம்பளி 800 ரூபாய் வரை விற்பனை செய்கிறோம். ஹரியானா மாநிலத்தில் இருந்து கம்பளிகளை இறக்கும்மதி செய்கிறோம். மக்கள் கேட்ட விலைக்கும் விற்கிறோம், என்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Winter, wool, sale
× RELATED கடலூர் மாவட்டத்தில் 3 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை