×

கஜா புயல்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து உதவிக்கரம் நீட்டும் மக்கள்!


 திருவண்ணாமலை: கஜா புயல் காரணமாக கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ள நாகை, தஞ்சை, திருவாரூா் உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு பொதுமக்கள் உதவலாம் என்று தமிழக அரசு கோாிக்கை விடுத்துள்ளது. கடந்த 15ம் தேதி கரையை கடந்த கஜா புயல் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்களை கொடையாளிகள் வழங்கி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வியாபாரிகள் சங்கம் சார்பாக அரிசி, சர்க்கரை, மெழுகுவர்த்தி உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன.

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து அரிசி, பிஸ்கட், பருப்பு வகைகள், மருந்துகள், குடிநீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவச பொருட்களை பொது மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர். அவர்கள் இடம் இருந்து பெறப்பட்ட பொருட்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டன. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக அரிசி, சர்க்கரை, மெழுகுவர்த்தி, பெட்ஷீட் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டன. திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுமார் ரூ.2 லட்சம் மதிப்புள்ள நிவாரண பொருட்களை பொதுமக்கள் அனுப்பிவைத்தனர்.

அரிசி, காய்கறிகள், உடைகள் உள்ளிட்ட பொருட்களை பொதுமக்கள் வழங்கினர். புயலால் பாதிக்கப்பட்ட பட்டுக்கோட்டை பகுதிக்கு ரூ.25 லட்சம் மதிப்புள்ள பொருட்களை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அனுப்பிவைத்துள்ளார். பால் பவுடர், முட்டைகள், பாத்திரங்கள், அரிசி போன்ற நிவாரணப் பொருட்களை சமூக ஆர்வலர்களும் தொண்டு நிறுவனங்களும் மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கினர். சென்னை கோடம்பாக்கத்தில் இளைஞர்கள் சிலர் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒன்று சேர்ந்து நிவாரண முகாம் ஒன்றை அமைத்து சுமார் ரூ.7 லட்சம் மதிப்பிலான பொருட்களை புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனுப்பிவைத்தனர்.                




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tamil Nadu , Nagage, Gaza storm, rain, work
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...