சென்னை உள்பட வடமாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : தமிழ்நாடு வெதர்மன் தகவல்

சென்னை : காற்றழுத்த தாழ்வு நிலை சென்னை -பாண்டி இடையே கரையை கடக்கும் என தமிழ்நாடு வெதர்மன் தகவல் தெரிவித்துள்ளார். இதனால் காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை பகுதிகளில் கனமழை பெய்ய உள்ளதாக தமிழ்நாடு வெதர்மன்  பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் நாளை வரை கனமழை முதல் மிகக்கனமழை பெய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சென்னைக்கு வெளியில் மிக பெரிய மேகம் கூட்டங்கள் மழை பெய்ய தயாராக உள்ளதாகவும், காற்றழுத்த தாழ்வு நிலை வடகடலோர பகுதிகளில் கரையை இன்று கடக்கும் என்றும், சென்னையில் மிதமான முதல் கனமழை பெய்யும் என்றும் சில நேரங்களில் மிககனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தமிழ்நாடு வெதர்மன் பதிவிட்டுள்ளார்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், பாண்டி, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் வேலூர் ஆகிய பகுதிகளில் இன்று மற்றும் நாளை மழை பெய்யும் என்றும்  தென் சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஆகிய பகுதிளில் மிக அதிகமான மழை மற்றும் மிக மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

காற்றழுத்த தாழ்வு நிலை  பாண்டி மற்றும் சென்னை இடையே கரையை கடந்தால் வட தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்யும் என்றும் கடலூரில் மழைக்கு பெய்ய வாய்ப்பு மிகவும் குறைவு என்றும் தெரிவித்துள்ள பிரதீப் ஜான் சென்னை மற்றும் பாண்டியில் மணிக்கு 50 முதல் 60கி,மீ வரை காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளார். புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்றும் டெல்டா மாவட்டங்களில் விட்டு விட்டு மழை இருக்கும் எனவும் தமிழ்நாடு வெதர்மன் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: