டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக நிவாரணப் பணிகள் பாதிக்காது: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சென்னை: கஜா புயல் நிவாரணப் பணிகள் மழையால் பாதிக்கப்படாது என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். கஜா புயல் தொடர்பாக சென்னை ஏழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் உதயகுமார், தமிழகத்தில் பரவலாக பெய்து வரும் மழையால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்தாண்டு முக்கிய அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்றும் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது என்று தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக நிவாரணப் பணிகள் பாதிக்காது என்றும் திருவாரூர் மாவட்டத்தில் முழுவதும் சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகள் 6-வது நாளாக நடைபெற்று வருகிறது. புயல் பாதித்த பகுதிகளில் நடமாடும் மருத்துவ குழுக்கள் தொடர்ந்து இயங்கி வருவதாக தெரிவித்தார். புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடிநீர் இணைப்புகள் சீரானது என்றும் கொட்டும் மழையிலும் மின்வாரிய ஊழியர்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர். துண்டிக்கப்பட்ட 58 லட்சம் மின் இணைப்புகளில், 38 லட்சம் இணைப்புகள் சீரானது என்றும் 270 வார்டுகளில் 250 வார்டுகளில் மீண்டும் மின் இணபை்பு கொடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார். பேரூராட்சி, ஊராட்சிகளில், ஜெனரேட்டர் மூலம் நீர் இறைக்கப்பட்டு குடிநீர் வழங்கப்படுகிறது என்றார்.

தற்போதைக்கு 465 முகாம்கள், 535 மருத்துவ முகாம்கள் செயல்பாட்டில் உள்ளது என்றும் கஜா புயலால் 2,17,935 மரங்கள் சாய்ந்துள்ளன, 91,960 மரங்கள் அகற்றப்பட்டுள்ளது என்றார். தென்மேற்கு வங்கக்கடலில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி நீடிக்கிறது என்றார். நீரிநிலையங்களை தொடர்ந்து கண்காணிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்றும் தெரிவித்தார். இதற்கிடையே கஜா புயல் பாதிப்புகள் குறித்து விளக்கவும், உரிய நிதியும் பெறவும் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்வர் பழனிசாமி இன்று டெல்லி செல்கிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: