×

ஆப்கானிஸ்தானில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் பலி எண்ணிக்கை 50-ஆக உயர்வு

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் மண்டபம் ஒன்றில் இறைத்தூதர் முகமது நபியின் பிறந்தநாளை முன்னிட்டு மதகுருமார்கள் நடத்திய மிலாடிநபி கொண்டாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் 50 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். மேலும் 70-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கலாம் என அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மதகுருமார்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தாக்குதல் நடந்துள்ளது என காபூல் போலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். இதுவரை எந்த தீவிரவாத அமைப்புகளும் தாக்குதலை தாங்கள் நடத்தியதாக ஒப்புக்கொள்ளவில்லை. இந்த பயங்கர தாக்குதலில் காயமடைந்தவர்களில் 20-க்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனால் இறப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதி சாலையை போலீசார் சீல் வைத்து மூடியுள்ளனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரஃப் காணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Suicide bombings ,Afghanistan , 50 people,killed,suicide attack,Afghanistan,injured
× RELATED ஆப்கான் மசூதியில் திடீர் துப்பாக்கி சூடு: 6 பேர் பலி