×

நாகை அருகே கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் சீரமைப்புப் பணிகளில் மின்வாரிய ஊழியர்கள்

நாகை: தமிழகத்தில் நாகை, வேதாரண்யம் பகுதிகளில், கடந்த 15 ஆம்  தேதி கஜா புயல் கரையைக் கடந்தது. இந்தப் புயல் தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயலால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அடிப்படைத் தேவைகளுக்கே அவர்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ பல்வேறு தரப்பினரும் ஆர்வம் காட்டிவருகின்றனர்.

இந்நிலையில் கஜா புயல் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் உயிரை பணையம் வைத்து வேலை செய்யும் மின் வாரிய ஒப்பந்த தொழிலாளர்களின் சேவை அனைவரையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. புயல் பாதித்த பகுதிகளில் 1 லட்சம் மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மின்சார வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் இருந்தால் தான் குடிநீர் விநியோகம், நீர் ஏற்றல் போன்ற பணிகள் நடக்கும் என்ற நிலையில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

கரூர், ஈரோடு, சேலம், காஞ்சிபுரம் உள்ளிட்ட  மாவட்டங்களை சேர்ந்த 2500 மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மின் கம்பங்களை சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். நாகை, வேளாங்கண்ணி நெடுஞ்சாலையில் கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் மழையில் நனைந்துக் கொண்டே உயிரை பணையம் வைத்து மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி செய்ததை கண்டவர்கள் அவர்களின் அற்பணிப்பைக் கண்டு நெகிழ்ச்சியடைந்தனர். மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையும் முன் வைக்கப்பட்டுள்ளன.                            


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Electricity workers ,Naga , Nagage, Gaza storm, rain, work
× RELATED காரைக்காலில் இருந்து நாகைக்கு சொகுசு...