×

அதிபர் டிரம்ப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சிஎன்என் நிருபருக்கு மீண்டும் வெள்ளை மாளிகையில் அனுமதி

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், வெள்ளை மாளிகையில் நுழைய அனுமதி ரத்து செய்யப்பட்ட சிஎன்என் நிருபருக்கு மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகையில் கடந்த 7ம் தேதி அதிபர் டொனால்ட் டிரம்ப் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, சிஎன்என் செய்தி தொலைக்காட்சி நிருபர் ஜிம் அகஸ்டா, டிரம்ப்பிடம் பல்வேறு கேள்விகளை தொடர்ந்து எழுப்பினார். இதனால் கோபமடைந்த டிரம்ப், தனது உதவியாளர் மூலமாக நிருபர் ஜிம் அகஸ்டாவை வெளியேற்றினார். மேலும், வெள்ளை மாளிகையில் நுழைவதற்கு அவருக்கு வழங்கப்பட்டு இருந்த அனுமதியும் ரத்து செய்யப்பட்டது.

இது கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. நிருபர் அகஸ்டாவை மீண்டும் வெள்ளை மாளிகையில் அனுமதிக்க கோரி சிஎன்என் சார்பில் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த நீதிமன்றம், அகஸ்டாவிற்கு அனுமதி வழங்கும்படி வெள்ளை மாளிகைக்கு உத்தரவிட்டது. இதையடுத்து, கடந்த வெள்ளிக் கிழமை வெள்ளை மாளிகை அவருக்கு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், நேற்று வெள்ளை மாளிகைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக சிஎன்என் அறிவித்தது. இதையடுத்து நிருபர்கள் ஒரு கேள்விக்கு மேல் கேட்க கூடாது என்ற நிபந்தனையை வெள்ளை மாளிகை அமல்படுத்தியுள்ளது.

சென்னை இளம்பெண் தேர்வு
அமெரிக்காவில் வசித்து வருபவர் ஸ்ருதி பழனியப்பன் (20). இவரது பெற்றோர் சென்னையில் இருந்து கடந்த 1992ம் ஆண்டு அமெரிக்காவில் குடியேறினர். இந்நிலையில், ஹார்ட்வர்டு பல்கலைக் கழகத்தின் இளங்கலை கவுன்சில் மாணவர் அமைப்பின் தலைவராக ஸ்ருதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை தலைவராக ஜூலியா ஹீயூசா (20) தேர்வாகி உள்ளார். ஸ்ருதியும், ஜூலியாவும் தங்களை எதிர்த்து போட்டியிட்ட நதினி, அர்னவ் அக்ரவால் ஆகியோருக்கு எதிராக 41.5 சதவீத வாக்குகளை அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளனர். மாணவர் அமைப்பின் தலைவராகி உள்ள ஸ்ருதி, தற்போது கவுன்சிலின் கல்வி குழுவில் இடம் பெற்றுள்ளார்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : reporter ,CNN ,dispute ,Chancellor ,White House , Trump, CNN reporter, White House
× RELATED கொடுங்கையூர் டாஸ்மாக் கடையில் தகராறு...