×

சில்லி பாயின்ட்...

* தங்கள் அணியுடன் இருதரப்பு தொடர்களில் விளையாடுவதை தவிர்த்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம் 450 கோடி நஷ்டஈடு தர வேண்டும் எனக் கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கை ஐசிசி தள்ளுபடி செய்துள்ளது.
* வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக நிக் போதாஸ் (தென் ஆப்ரிக்கா, 45 வயது) நியமிக்கப்பட்டுள்ளார்.
* பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில், லாகூர் அணிக்காக விளையாட தென் ஆப்ரிக்க அதிரடி வீரர் டி வில்லியர்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
* பந்தை சேதப்படுத்தியதாக சர்ச்சையில் சிக்கிய ஸ்மித், வார்னர், பேங்க்ராப்ட் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடையை விலக்கிக்கொள்ள முடியாது என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
* தமிழக அணியுடன் ஓங்கோல் சிஎஸ்ஆர் ஷர்மா கல்லூரி மைதானத்தில் நேற்று தொடங்கிய ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் ஆட்டத்தில், ஆந்திரா முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன் எடுத்துள்ளது (79 ஓவர்). சாய் கிருஷ்ணா 58, சோயிப் கான் 26, ரிக்கி புயி 22 ரன் எடுத்தனர். கிரிநாத் ரெட்டி (69 ரன்), அய்யப்பா (0) களத்தில் உள்ளனர். தமிழக பந்துவீச்சில் முகமது 4, நடராஜன், சாய் கிஷோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
* ‘ஆஸ்திரேலிய வீரர்கள் எல்லை மீறி நடந்துகொண்டால், பதிலடி கொடுக்க நாங்கள் தயங்க மாட்டோம். ஆக்ரோஷம் என்பது களத்தில் இருக்கும் சூழ்நிலையை பொறுத்தது. எதிரணியினர் அவ்வாறு நடந்துகொள்ளும்போது, அதை வேடிக்கப் பார்க்க முடியாது. நாங்களாக எந்த வித வாக்குவாதத்தையும் தொடங்குவதில்லை. அதே சமயம், எங்களின் சுய மரியாதையை சீண்டினால் அதை கடுமையாக எதிர்ப்போம்’ என்று இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : All Sports
× RELATED அக்சர் 66, பன்ட் 88*, ஸ்டப்ஸ் 26* கேப்பிடல்ஸ் 224 ரன் குவிப்பு