×

6வது நாளாக மீண்ட ரூபாய் மதிப்பு

மும்பை : ஆறாவது நாளாக ரூபாய் மதிப்பு சரிவே இல்லாமல் உயர்ந்தபடி உள்ளது மூன்று மாதத்துக்கு முன் இருந்த நிலை இப்ேபாது தான்  எட்டியுள்ளது. சர்வதேச  அளவில் கரன்சி மதிப்பில் அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து உச்சத்தில் இருந்த காலம் இப்போதெல்லாம் இல்லை என்று தான் கூற வேண்டும். சில நாடுகளின் கரன்சிகளுடன் டாலர் தொடர்ந்து ேகாலோச்ச  முடியவில்லை. இப்படி சில நாடுகளின் கரன்சிகளுக்கு டாலர்  மதிப்பு சற்று இறங்கி இருப்பதால் இந்தியாவுக்கு அதிருஷ்டம் என்று சொல்ல வேண்டும். ஆம், மற்ற நாடுகளின் கரன்சிகள் சற்று மதிப்பு அதிகரித்துள்ளதால், அதற்கு ஈடாக இந்திய கரன்சியும் சற்று நிம்மதி பெருமூச்சு விடும் அளவுக்கு காணப்படுகிறது. கடந்த ஆறு நாளாக ரூபாய் கரன்சி மதிப்பு தொடர்ந்து ஏறுமுகமாக தான் உள்ளது.

நேற்று வர்த்தகம் முடிந்த நிலையில், ரூபாய் மதிப்பு டாலருக்கு  எதிராக 71.31  என்ற அளவில் காணப்பட்டது. இது மீண்டும் பழைய நிலைக்கு போக முடியுமா என்றால்  அது பெரும் கேள்விக்குறி. இப்போது தான் செப்டம்பர் 4ம் தேதி நிலைக்கு ரூபாய் மதிப்பு போயுள்ளது. மற்ற கரன்சிகளின் மதிப்பு உயர்வதால் இந்திய கரன்சியும் சீராக மதிப்பை பெற்று வருகிறது என்பதற்கு இன்னொரு முக்கிய காரணம், அன்னிய  முதலீடு சீராக வந்து ெகாண்டிருப்பதும் கூட.
ரிசர்வ் வங்கியும் இந்த நிலையை கண்டு, ரூபாய் மதிப்பை மீண்டும் நிலை நிறுத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்  என்று தீவிரமாக இறங்கியுள்ளது. அன்னிய செலாவணி கையிருப்பை பலப்படுத்துவது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : 6th Rupee worth , return
× RELATED ஏப்ரல் 1 ஆம் தேதி ரூ.2000 நோட்டுகளை மாற்ற முடியாது: ரிசர்வ் வங்கி அறிவிப்பு