×

அனைத்து பணிகளையும் ஒரே இரவில் மேற்கொள்ள முடியாது: கஜா புயல் குறித்த மனுவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கருத்து

சென்னை: கஜா புயல் நிவாரணப் பணிகளை சென்னை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். நாகப்பட்டினம் அருகில் கஜா புயல் கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியிட்டதைத் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டது. இதன் காரணமாக உயிர்ச்சேதங்கள் பெருமளவில் தவிர்க்கப்பட்டன. புயல் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளை விரைந்து சீர் செய்யும் நடவடிக்கைகள் தற்போது போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாழ்வான பகுதிகளில் இருந்த 2,49,083 பேர் எவ்வித பாதிப்புக்கும் உள்ளாகாமல் இருக்க அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு 493 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், பாய், போர்வை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கஜா புயல் பாதித்த மாவட்டங்களை பேரிடர் பகுதிகளாக அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ரஜினிகாந்த் என்பவர் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி அமர்வு, அனைத்து பணிகளையும் ஒரே இரவில் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்க முடியாது என்று கருத்து தெரிவித்தனர்.  மேலும் புயல் நிவாரண பணிகளுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ.1000 கோடி ஒதுக்கியுள்ளார் என்றும் புயல் பாதிப்பு குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளது என்று கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : judges ,High Court ,storm ,Ghazi , Madras High Court, Work, Gaza Storm, Manu, High Court Judges, Opinion
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...