×

பிசிசிஐக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கை ஐசிசி தீர்ப்பாயம் தள்ளுபடி

டெல்லி: பிசிசிஐக்கு எதிராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தொடர்ந்த வழக்கை, ஐசிசி தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. மேலும் 2014ஆம் ஆண்டு தொடங்கி 2023ஆம் ஆண்டு வரை 6 தொடர்களை நடத்துவதென பிசிசிஐயும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் ஒப்பந்தம் செய்து கொண்டன. ஆனால் இருநாட்டு அரசியல் சூழல் காரணமாக தொடர்களை விளையாட முடியவில்லை. இதனால், பிசிசிஐயிடம் இருந்து 447 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு ஐசிசி தீர்ப்பாயத்தில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வழக்கு தொடர்ந்தது.

இந்த மனு மீதான விசாரணை கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்தது. இறுதியில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் மனுவை ஐசிசி தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது. மேலும் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்து விட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : ICC Tribunal ,BCCI ,Pakistan Cricket Board , ICC Tribunal,dismissed,case,Pakistan Cricket Board,BCCI
× RELATED அணியின் நலனுக்காக புதிய...