×

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மதியம் முதல் வெளுத்து வாங்கும் மழை

சென்னை; சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் முழுவதும் பிற்பகல் 2 மணி முதல் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது; பட்டினப்பாக்கம், அடையாறு, சாந்தோம், மந்தைவெளி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல்,அசோக் நகர், வடபழனி, கோயம்பேடு, வேளச்சேரி, தரமணி, நங்கநல்லூர், எழும்பூர், தாம்பரம் , அனகாபுத்தூர், சோழவரம், நீலாங்கரை, வளசரவாக்கம், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர், அயனாவரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கோடம்பாக்கம், பல்லாவரம், சேத்துப்பட்டு, சிட்லப்பாக்கம், தி நகர், பூந்தமல்லி, அம்பத்தூர், ஆவடி, மதுரவாயல் ஆகிய பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் நல்ல மழை பெய்கிறது.

வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக வட தமிழகத்திலும், கடலோர மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்யும் என்று வானிலை முன்னறிவிப்புகள் கூறியிருந்த நிலையில் சென்னையில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மாலை அல்லது இரவு முதல் மழை பெய்யத் துவங்கும் என எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் மதியம் 2 மணி முதலே நகரின் பல பகுதிகள் கருமேக கூட்டத்தால் இருண்டன. நகரின் பல பகுதிகளில் ஆங்காங்கே காற்றுடன் கூடியக கனமழை பெய்து வருகிறது. புறநகர் பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. பள்ளி, கல்லூரிகள் விடும் நேரத்தில் மழை பெய்து வருவதால் மாணவர்கள் வீடு திரும்புவதில் சிரமம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.+ சென்னை மட்டுமல்லாமல் கடலோர தமிழகத்தில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக புயலால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள காவிரி டெல்டா மாவட்டங்களலான நாகை மற்றும் திருவாரூரில் கனமழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : suburbs ,Chennai , Heavy rain, Chennai, suburban areas
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...