×

தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேரின் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்

சென்னை: தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் 3 பேர் விடுதலை குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் அரசியல் சட்டம் பிரிவு 161-ன் படி 3 பேரும் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டனர் என்று ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. மேலும் 3 பேரை சமூகம் ஏற்றுக்கொள்ளும் என்று தமக்கு திருப்தி ஏற்பட்டதால் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஆளுநர் தெரிவித்துள்ளார். கும்பல் நடத்திய வன்முறையால் தான் 3 மாணவிகள் இறந்ததாக நீதிமன்றமும் தீர்பளித்தது. 3 பேரை விடுவிக்க தமிழக அரசு 3 முறை கோப்புகளை ஆளுநருக்கு அனுப்பியது. 3 முறை பரிந்துரைத்த போதும் ஆளுநர் திருப்தி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் 13 ஆண்டுகள் சிறையில் இருந்துவிட்டதால் தற்போது விடுதலை செய்ய ஆளுநர் சம்மதம் தெரிவித்துள்ளதாக ஆளுநர் மாளிகை விளக்கமளித்துள்ளது. முன்னதாக 2000-ம் ஆண்டில் டான்சி வழக்கில் ஜெயலலிதாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டதால் வன்முறையில் ஈடுபட்ட அதிமுகவினர் தருமபுரி அருகே கல்லூரி பேருந்து ஒன்றை தீவைத்து எரித்தனர். இதில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3 மாணவிகள் உயிரிழந்தனர். இந்த வழக்கில் அதிமுக பிரமுகர்களான நெடுஞ்செழியன், ரவீந்திரன், மற்றும் முனியப்பன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2016-ம் ஆண்டு 3 பேரின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதனிடையே, எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விடுதலை செய்யுமாறு தமிழக அரசு அரசாணை பிறப்பித்திருந்தது. அதைத் தொடர்ந்து, ஆளுநரின் ஒப்புதல் பெற்று தமிழகம் முழுவதும் ஆயுள் கைதிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றனர். இதனைதொடர்ந்தே தருமபுரி பேருந்து எரிப்பு வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் 3 பேரையும் முன்கூட்டியே விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : release ,persons ,Governor's House ,Dharmapuri , chennai,Governor's House,release,3 persons,Dharmapuri bus burning case
× RELATED ரோடு ஷோவுக்கு வந்தபோது ஆளுநர்...