×

கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரி ஐகோர்ட் கிளையில் முறையீடு: அவசர வழக்காக பகல் 1 மணிக்கு விசாரணை

மதுரை: கஜா புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்கக்கோரியும், நிவாரணப்பணிகளை துரிதப்படுத்த கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை பகல் 1 மணிக்கு அவசர வழக்காக எடுத்து விசாரணை மேற்கொள்வதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர். நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு அமர்வு முன் வழக்கறிஞர் அழகுமணி முறையீடு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதில் கஜா புயல் காரணமாக இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பயிர்கள், மரங்கள் சேதத்திற்கு உரிய நிவாரணம் வழங்கப்பட வேண்டும் என கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. முப்படையினரை களத்தில் இறக்கி மீட்புப் பணியை துரிதப்படுத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் மின்விநியோக பாதிப்பை உடனடியாக சீரமைக்க உத்தரவிடக்கோரியும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. காஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவாரண உதவிகள் சரியாக கிடைக்கவில்லை என பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நீதிபதிகள் இந்த வழக்கை அவசர வழக்காக ஏற்று இன்று பகல் 1 மணிக்கு விசாரணை மேற்கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : court ,hurricane ,disaster ,Ghazi , appeal,High Court,declare,impact,gaja strom,national disaster,
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...