×

இலங்கை நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: எதிர்கட்சிகள் கோரிக்கை

இலங்கை: இலங்கை நாடாளுமன்றத்தில் மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று முக்கிய எதிர்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள உச்சகட்ட அரசியல் குழப்பத்தின் நடுவே, அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று மீண்டும் கூடியது. அப்போது ஜனதா விமுக்தி பெரமுனா அமைப்பின் அனுரகுமார திஸநாயக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். ஆனால் அதனை ஏற்க பொறுப்பு சபாநாயகர் ஆனந்தகுமார் மறுத்து விட்டார்.

இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றம் மீண்டும் 23ம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட்டது. இதனிடையே நம்பிக்கை வாக்கெடுப்பின் போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என்று இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேன யோசனை தெரிவித்துள்ளார். மேலும் இதற்கு முன்பு நடத்திய நம்பிக்கை வாக்கெடுப்பின் போது சில குழப்பங்கள் ஏற்பட்டதால் அவை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல் மறுமுறை அவை கூட்டம்  நடைபெற்ற போது சபநாயகா் கரு ஜெயக்குமார் மீது மிளகாய்பொடி வீசப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lankan ,parliament ,confidence vote , Sri Lankan parliament,hold,confidence vote, Opposition demands
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!