பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதிக்க எடுத்த நடவடிக்கை என்ன?: அரசு அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் உத்தரவு

மதுரை: மதுரை, யாகப்பா நகர் மேற்கு குடியிருப்போர் நலச்சங்க தலைவர் இருளாண்டி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பொதுமக்கள் பயன்படுத்திய பிறகு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் நீர்நிலைகளில் தேங்கி கிடக்கின்றன. இதனால் இயற்கை, சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு ஏற்படுகிறது. மனிதன் மட்டுமின்றி விலங்குகளும் அதிக பாதிப்பை சந்திக்கின்றன. அண்மையில் நடந்த பூமி தின மாநாட்டில், பிளாஸ்டிக் உற்பத்தியை நிறுத்தினால் தான் இயற்கை, சுற்றுச்சூழல், நீர்நிலைகளை காப்பாற்ற முடியும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

எனவே, பிளாஸ்டிக் உபயோகத்தை தடுக்கவும், மாற்றாக சணல், அலுமினியம், மண்பாண்ட பொருட்களின் உபயோகத்தை அதிகரிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், தமிழகத்தில் பிளாஸ்டிக் உற்பத்திக்கு தடை விதிக்கவும், பிளாஸ்டிக் விற்பனையை தடுக்கவும் என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறித்து, அரசு தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிசம்பர் 3க்கு தள்ளி வைத்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: