×

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயற்கை பேரிடர் பாதித்த பகுதியாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

புதுக்கோட்டை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயற்கை பேரிடர் பாதித்த பகுதிகளாக மத்திய அரசு அறிவித்து நிவாரண பணிகளை தொடங்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் கூறினார். புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் நேற்று பார்வையிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இயற்கை பேரிடர் பகுதிகளாக மத்திய அரசு அறிவித்து இயற்கை பேரிடர் நிதியிலிருந்து உடனே நிவாரண பணிகளை தொடங்க வேண்டும். மின்தடை 4 நாட்களாக நீடிப்பதால் பொதுமக்கள் மெழுகுவர்த்திகூட கிடைக்காமல் அல்லல்பட்டு வருகின்றனர்.

எனவே மாநில அரசு உடனே அனைத்து ரேஷன் கடைகளிலும் இலவச மண்ணெண்ணெய் வழங்குவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மீட்பு பணி குழுவினரை வரவழைத்து மீட்பு பணியை விரைவுபடுத்த வேண்டும். அனைத்து அரசியல் கட்சிகளும் அரசியல் செய்யாமல் மக்கள் மீண்டு வருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இதேபோல சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் ரசிகர் மன்றங்கள் ஆகியோருடன் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு உடனே குழு அமைத்து பாதிக்கப்பட்ட பகுதிகளை கணக்கீடு செய்து இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,disaster ,Ghaz ,storm , Gaja storm, natural calamity, central government, Mutharasan
× RELATED கர்நாடகாவுக்கு வறட்சி நிவாரணம்...