தூத்துக்குடியில் நிலத்தடிநீர் பாதிப்பு வழக்கு உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடலாம்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ஸ்டெர்லைட் ஆலையால் தூத்துக்குடி பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யலாம் என்று தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் மத்திய நிலத்தடி நீர் வாரியம் ஆய்வுகளை மேற்கொண்டது. அதன் அடிப்படையில், தூத்துக்குடி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் நிலத்தடி நீர் மாசு ஏற்பட்டுள்ளதற்கு ஸ்டெர்லைட் நிறுவனம் மட்டும் காரணமல்ல என்று அறிக்கையை மத்திய நிலத்தடி நீர் வாரியம் கடந்த ஜூலை மாதம் வெளியிட்டது. இந்த அறிக்கையை எதிர்த்து தமிழக அரசின் சுற்றுச்சூழல் துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்  தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி ஆகியோர் நேற்று பிறப்பித்த உத்தரவில், இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரிப்பதே உகந்ததாக இருக்கும். அதனால் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம் என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர். இதற்கிடையே ஸ்டெர்லைட் விவகாரத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய உத்தரவிற்கு தடை விதிக்கக் ேகாரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த சீராய்வு மனு இன்று பிற்பகல் 1.30மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: