நிவாரணப் பொருட்களை அரசு பஸ்களில் இலவசமாக எடுத்துச்செல்ல அனுமதி: தமிழக போக்குவரத்துத்துறை உத்தரவு

சென்னை: தமிழகத்தில் ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு நிவாரணப்ெபாருட்களை எடுத்துச்செல்வோரிடம், கட்டணம் வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கு, போக்குவரத்துத்துறை உத்தரவிட்டுள்ளது.

‘கஜா’ புயல் காரணமாக நாகை, வேதாரண்யம், புதுக்கோட்டை, கடலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல லட்சம் மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. ஆயிரக்கணக்கான மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. உணவு, உடை இல்லாமல் ெபாதுமக்கள் ஆங்காங்குள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இதையடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு சாப்பாடு, தண்ணீர், பிஸ்கட் போன்ற நிவாரணப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவை முழுமையாக சென்றடையவில்லை என அரசியல் கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

மேலும் அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்புகள், மாணவர்கள் என பலர் நிவாரணப்ெபாருட்களை அனுப்பி வைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களிடம் அரசு பஸ்களின் கட்டணம் வசூல் செய்யப்படுவதாக விமர்சனம் எழுந்தது. இதையடுத்து சம்மந்தப்பட்ட பகுதிகளுக்கு, நிவாரணப்பொருட்களை எடுத்துச்செல்வோரிடம் கட்டணம் வாங்க வேண்டாம் என நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் புயல்பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு பொருட்களை எடுச்செல்வது எளிதாகியிருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு விரைவுபோக்குவரத்துக்கழக மேலாண்மை இயக்குனர் பாஸ்கரன் கூறுகையில், ‘‘புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச்செல்வோரிடம், கட்டணம் வசூல் செய்ய வேண்டாம் என நடத்துனர்களிடம் தெரிவித்துள்ளோம். இதன் மூலம் பொருட்களை எளிதாக கொண்டு சேர்க்கலாம்’’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: