5 மாநில தேர்தல் பாதுகாப்பு பணி தமிழகத்தைச் சேர்ந்த 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பயணம்

சென்னை: 5 மாநில தேர்தல் பாதுகாப்புக்கு தமிழகத்தைச் சேர்ந்த 13 ஐபிஎஸ் அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளனர். தெலங்கானா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் தேர்தல் நடக்கிறது. அதில் சத்தீஸ்கரில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. இன்று 2வது கட்ட வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இந்நிலையில், இந்த தேர்தலுக்கு தமிழகத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகளை பாதுகாப்புக்கு அனுப்ப வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக் கொண்டது.

அதன்படி அதிரடிப்படை ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், நவீன மயமாக்கல் ஐஜி வினித் தேவ் வாங்கடே, போலீஸ் கமிஷனர் சுமீத் சரண், பொருளாதார குற்றப்பிரிவு ஐஜி சஞ்சீய்குமார், வட சென்னை சட்டம் ஒழுங்கு கூடுதல் கமிஷனர் தினகரன், ரயில்வே டிஐஜி செந்தில்குமாரி, மனித உரிமை ஆணைய எஸ்பி சத்தியப்பிரியா, புதுடெல்லியில் உள்ள தமிழ்நாடு சிறப்புக் காவல்படை எஸ்பி அபிஷேக் தீட்ஷித், சென்னை மத்தியக் குற்றப்பிரிவு துணை கமிஷனர் மல்லிகா, சிபிசிஐடி சைபர் கிரைம் எஸ்பி சாமுண்டீஸ்வரி, வேலூர் எஸ்பி பிரவேஸ்குமார், க்யூ பிரிவு எஸ்பி தர்மராஜன், திருவாரூர் எஸ்பி விக்ரமன் ஆகிய 13 பேரை அனுப்புவதாக தமிழக அரசு தெரிவித்தது. அதைத் தொடர்ந்து அவர்கள் 5 மாநில தேர்தலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் தமிழகம் திரும்புவார்கள்

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: