‘கஜா’ புயல் மீட்பு பணிகளுக்கு அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியம்: முதல்வருக்கு கடிதம்

சென்னை: கஜா புயல் மீட்பு பணிகளுக்கு தமிழகத்தில் பணிபுரியும் அரசு அலுவலர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது. இதுகுறித்து முதல்வருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் ‘கஜா’ புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரித மீட்பு நடவடிக்கைகளில் தமிழக அரசின் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறார்கள். தமிழகத்தில் இதுபோன்று ஏற்பட்ட பல்வேறு இயற்கை பேரிடர் நிகழ்வுகளின் போதும், தற்போதைய கேரள மாநில பெரு வெள்ளம் நிகழ்வுகளின் போதும் மக்களின் துயரத்தினை துடைக்கும் விதமாக ஒருநாள் ஊதியம் வழங்கியுள்ளோம்.

அதேபோன்று தற்போது ‘கஜா’ புயல் மீட்பு நடவடிக்கைகளுக்காக தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு தமிழக அரசு அலுவலர்களின் பங்காக ஒரு நாள் ஊதியத்தை அளிக்க தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் சார்பில் தீர்மானித்துள்ளோம் என்பதை முதலமைச்சரின் கனிவான கவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறோம். எங்களது தீர்மானத்தை ஏற்று, அதற்குரிய அரசாணை பிறப்பித்து தமிழக அரசு அலுவலர்களின் ஒருநாள் ஊதியத்தை பிடித்தம் செய்து அதனை முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இணைத்துக்கொள்ள வழிவகை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு கூறியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: