மு.க.ஸ்டாலினுடன் காதர் மொகிதீன் சந்திப்பு

சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளர் காதர் மொகிதீன் நேற்று அண்ணா அறிவாலயம் வந்தார். திமுக தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். அவருடன் அபுபக்கர் எம்எல்ஏ வந்திருந்தார். இந்த சந்திப்புக்கு பின்பு காதர் மொகிதீன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு: வரும் 24ம் தேதி முதல் டிசம்பர் 24ம் தேதி வரை பாசிச சக்திகளுக்கு எதிராக இந்தியாவை காப்போம் என்ற பேரணியை கேரளாவில் உள்ள காசர்கோட்டில் இருந்து திருவனந்தபுரம் வரை நடத்த இருக்கிறோம். இந்த பேர ணியில் முஸ்லிம் லீக் இளைஞர்கள் பெருமளவில் பங்கேற்பார்கள். வரும் 2ம் தேதி பேரணியை முன்னிட்டு கோழிக்கோட்டில் தேசிய தலைவர்கள் பங்கேற்கும் மாநாடு நடக்கிறது.

இந்த மாநாட்டில் பங்கேற்குமாறு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்துள்ளோம். அதை அவர் ஏற்றுக் கொண்டுள்ளார். அதற்காக அவருக்கு நன்றி தெரிவித்தோம். இதையைடுத்து வரும் பிப்ரவரி மாதம் 16ம் தேதி மதுரையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அரசியல் மாநாடு நடத்துகிறோம். இந்த மாநாட்டிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்க சம்மதம் தெரிவித்துள்ளார். கஜா புயல் பாதிப்புக்கு மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு உடனடியாக நிவாரண நிதியை பெற்று நிவாரண பணிகளை துரிதப்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: