ஆன்லைன் மருந்து விற்பனைக்கு மத்திய அரசு தடை செய்யலாம்: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு

சென்னை:  ஆன்லைனில் மருந்துகள் விற்பனை செய்ய தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. அந்த மனுவில், பதிவு செய்யப்படாத ஏராளமான ஆன்லைன் கடைகள் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. மருத்துவர்களின் ஆலோசனை சீட்டு இல்லாமல் ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதனால், பொதுமக்களுக்கு காலாவதியான, போலியான, தவறான மருந்துகள் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் காரணமாக பொதுமக்கள் உடல் நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதுடன் உயிரிழப்புகளுக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் ஆன்லைனில் மருந்துகள் விற்பனை சட்ட விரோதம் என்று அறிவித்து ஆன்லைன் மருந்து விற்பனைக்குத் தடை விதித்து உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், உரிமம் பெறாத, பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்ய தடை விதித்து உத்தரவிட்டது.

வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த பதில் மனுவில், மருந்து கட்டுப்பாட்டு சட்டம் என்பது மத்திய அரசின் சட்டம்.  ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்யும் அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை. அனுமதி பெறாத நிறுவனங்கள் ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்வதைத் தடை செய்வது மத்திய அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று கூறப்பட்டிருந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் மத்திய அரசு பதில் தருமாறு உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பர் 5ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: