புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மக்களுக்கு தலைமை செயலக ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்கினர்

சென்னை: டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர்கள் ஒருநாள் சம்பளத்தை வழங்கியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு தலைமை செயலக சங்க தலைவர் பீட்டர் அந்தோணிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக்கடலில் உருவான கஜா புயலின் கோரதாண்டவத்துக்கு தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் இன்னுயிரையும், வீடுகளையும், கால்நடைகளையும் இழந்து மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு போர்க்கால அடிப்படையில் நிவாரண உதவிகளை வழங்கி வரும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

இதுபோன்ற இயற்கை பேரிடர் எப்பொழுதெல்லாம் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் தமிழ்நாடு தலைமை செயலக சங்கமானது முன்னின்று தனது பங்களிப்பை முழுமனதோடு உதவி செய்து வருகிறது. அதைப்போலவே இந்த நேரத்திலும் நமது டெல்டா மாவட்ட மக்களின் துயர் துடைக்க ஏதுவாக தமிழ்நாடு தலைமை செயலக பணியாளர்கள் ஒருநாள் ஊதியத்தை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்க மனித நேயத்துடன் முன்வந்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: