×

கபாலீஸ்வரர் கோயிலுக்கு வந்தபோது அதிமுக எம்எல்ஏ பிஏ ஸ்கூட்டர் திருட்டு

சென்னை : கபாலீஸ்வரர் கோயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த  அதிமுக எம்எல்ஏவின் உதவியாளரின் ஸ்கூட்டரை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை ஆழ்வார்பேட்டை சீத்தம்மாள் காலனியை சேர்ந்தவர் செல்ல கிருஷ்ணன் (35). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாசலம் என்பவரிடம் நேர்முக உதவியாளராக வேலை ெசய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை தனது குடும்பத்துடன் செல்ல கிருஷ்ணன் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு ஸ்கூட்டரில் வந்தார்.

பின்னர், ஸ்கூட்டரை கோயில் பின்புறம் குளக்கரை அருகே நிறுத்திவிட்டு குடும்பத்துடன் கோயிலுக்குள் ெசன்றார். சாமி தரிசனம் செய்து விட்டு இரவு 8 மணிக்கு செல்ல கிருஷ்ணன் ஸ்கூட்டரை எடுக்க வந்த போது வாகனம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து அவர் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் வழக்கு பதிவு செய்து கோயில் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று பைக் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MLA ,AIADMK ,PA ,Kapaleeshwarar temple , AIADMRA MLA PA ,Scooter theft
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்