×

1,500 லஞ்சம் வாங்கிய பெண் அரசு ஊழியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை

சென்னை : லஞ்சம் வாங்கிய பெண் அரசு ஊழியருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து லஞ்ச ஒழிப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, ஷெனாய் நகரில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்றுவாரிய குடியிருப்பில் ராணி அம்மாள் என்பவருக்கு வீடு இருந்துள்ளது. இவர், தனது மகள்களுக்கு அந்த வீட்டை கிரையம் செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில், வீட்டின் உரிமத்தை தங்களது பெயருக்கு மாற்றி தரக்கோரி கடந்த 2010ல் விண்ணப்பித்துள்ளனர். அப்போது பணியில் இருந்த அதிகாரி கணேசன், பில் கலெக்டர் வரலட்சுமி ஆகியோர் தங்களது பணியை செய்ய ராணி அம்மாளின் பேத்தி மல்லீஸ்வரியிடம் 1500 லஞ்சம் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மல்லீஸ்வரி, இதுகுறித்து சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசியமாக தகவல் அளித்தார். பின்னர் போலீசாரின் அறிவுரையின்படி மல்லீஸ்வரி ரசாயனம் தடவிய பணத்தை கணேசனிடம் அளித்தார். அப்போது மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை சென்னையில் உள்ள லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணையின் போதே கணேசன் உயிரிழந்தார். வரலட்சுமி மீதான வழக்கு நீதிபதி ஹெர்மிஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் பூர்ணிமாதேவி ஆஜராகி வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கில் வரலட்சுமி குற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவருக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும், 3 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் லஞ்சப் பணம் 1500 மல்லீஸ்வரியிடம் வழங்கவும் உத்தரவிட்டார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Woman bribed ,1,500 bribe,2 years imprisonment
× RELATED சேலம், அணைக்கட்டில் வீடு, வீடாக சென்று...