ம.பி. பிரசாரத்தில் அமித் ஷா பேச்சு: எதிர்க்கட்சிகளுக்கு மோடி போபியா

நரசிங்கபூர்: ‘‘நரேந்திர மோடி போபியாவால் (பயம்) எதிர்க்கட்சிகள் பாதிக்கப்பட்டுள்ளன’’ என பாஜ தேசிய தலைவர் அமித் ஷா தனது தேர்தல் பிரசாரத்தில் கூறி உள்ளார்.மத்தியப் பிரதேச மாநிலத்தில் வரும் 28ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. இதையொட்டி அங்கு பாஜ தேசிய தலைவர் அமித் ஷா தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். நரசிங்கபூரில் நடந்த பிரசார பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்று பேசியதாவது: நரேந்திர மோடி போபியாவால் எதிர்க்கட்சிகள் திக்கப்பட்டுள்ளன.

மோடியை எப்படியாவது பிரதமர் பதவியிலிருந்து விரட்டி விட வேண்டும் என்பதே அவர்களின் விருப்பம். ஆனால் நாங்கள் வறுமை, பாதுகாப்பின்மை, காற்று மாசு உள்ளிட்டவற்றை நாட்டிலிருந்து விரட்ட விரும்புகிறோம். மத்தியில் மோடி அரசு கடந்த 4 ஆண்டில் 129 வளர்ச்சித் திட்டங்களை தொடங்கியிருக்கிறது. 4 தலைமுறையாக இந்த நாட்டை ஆட்சி செய்தவர்கள் (நேரு-காந்தி குடும்பத்தினர்) என்ன செய்தார்கள் என்பதை கூற முடியுமா? சமீபத்தில் நடந்த பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 22 நிமிட பேச்சில், 44 முறை மோடியின் பெயரை உச்சரித்துள்ளார்.

இதைப் பார்த்து, அவர் காங்கிரசுக்காக பிரசாரம் செய்கிறாரா அல்லது பாஜ.வுக்காகவா என ஆச்சரியப்பட்டேன்.

2016ல் உரி ராணுவ முகாமில் தீவிரவாத தாக்குதல் நடந்தபோது நாடே ஆத்திரமடைந்தது. உடனடியாக சர்ஜிக்கல் தாக்குதலுக்கு மோடி உத்தரவிட்டார். தங்களின் ராணுவ வீரர்கள் பலிக்கு பழி வாங்க அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பிறகு சர்ஜிக்கல் தாக்குதல் நடத்திய 3வது நாடு இந்தியாதான்.

2014ல் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பதவியிலிருந்து வெளியேறும் போது, உலகளவில் இந்திய பொருளாதாரம் 9வது இடத்தில் இருந்தது. அதை பாஜ 6வது இடத்திற்கு உயர்த்தி இருக்கிறது. இந்த தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடக்கும் சமயத்தில், நாம் இங்கிலாந்தை முந்தி உலகின் 5வது மிகப்பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சி அடைய உள்ளோம். இவ்வாறு அவர் பேசினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: